Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

என் பெயர் ராகுல் சாவர்க்கர் அல்ல! பங்கமாய் கலாய்த்த ராகுல் காந்தி!

Advertiesment
National
, சனி, 14 டிசம்பர் 2019 (14:41 IST)
மத்திய அரசு நிறைவேற்றியுள்ள குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் ராகுல் காந்தி இந்து மகா சபை நிறுவனர் சாவர்க்கரை கிண்டல் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடைபெற்ற குளிர்கால கூட்டத்தொடரில் மக்களவையில் மத்திய அரசு இந்திய குடியுரிமை சட்டத்தில் திருத்தங்கள் செய்யும் மசோதாவை நிறைவேற்றியது. இது இந்திய இறையாண்மைக்கே எதிரானது என எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனாலும் இரு அவைகளிலும் பெரும்பான்மை கொண்ட பாஜக அரசு குடியுரிமை மசோதாவை நிறைவேற்றியது. இதனால் அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் வன்முறை வெடித்துள்ளது.

இந்நிலையில் மத்திய அரசின் புதிய குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் சார்பில் டெல்லியில் ஆர்ப்பாட்ட கூட்டம் நடந்து வருகிறது. ராகுல் காந்தி தலைமையில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்ட கூட்டத்தில் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் மன்மோகன் சிங் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

மோடியின் மேக் இன் இந்தியாவை ரேப் இன் இந்தியா என ராகுல் காந்தி பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டுமென மக்களவையில் பாஜக பெண் எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டிருந்தனர். அதற்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய ராகுல் காந்தி “என் பெயர் ராகுல் சாவர்க்கர் அல்ல. ராகுல் காந்தி! நான் தவறாக எதுவும் சொல்லாத பட்சத்தில் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை” என்று கூறியுள்ளார்.

இந்து மகா சபை நிறுவனர் சாவர்க்கர் சுதந்திர போராட்ட காலக்கட்டத்தில் அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டபோது, பிரிட்டிஷ் அரசுக்கு மன்னிப்பு கடிதம் எழுதி விடுதலை அடைந்ததாக ஒரு பேச்சு நெடுங்காலமாக நிலவி வருகிறது. அந்த கூற்றை மையப்படுத்தி ராகுல் காந்தி கிண்டலடிக்கும் தோனியில் இப்படி பேசியிருப்பதாக கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’அந்த வீடியோ’வை நீக்கினால் ரூ .10 ஆயிரம் சன்மானம் ! பாஜக கிண்டல் டுவீட்...