ரயில்வேயில் வழங்கப்படும் உணவு பார்சல் கொசுவர்த்தி அட்டையால் மூடப்பட்டிருந்த போட்டோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் ரயில்வே நிலையங்கள் செயல்பட்டு வரும் நிலையில் ரயில் நிலையங்களில் பல காண்ட்ராக்ட் உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. ரயில்களுக்குள் ஐஆர்சிடிசியின் கேண்டீன் இயங்கி வருகிறது. ரயில்களில் பயணிக்கும் மக்கள் ரயில் நிலைய உணவகங்களிலும், ரயிலில் உள்ள உணவகத்திலும் உணவை வாங்குகின்றனர்.
சமீபத்தில் அப்படி ஒருவர் வாங்கிய உணவு டப்பா மேல் கொசுவர்த்தி உள்ளிட்ட கெமிக்கல் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தின் அட்டைகள் மூடப்பட்டு சாப்பாடு டெலிவரி செய்யப்பட்டதாக ட்விட்டர் பயனர் ஒருவர் போட்டோவுடன் பதிவிட்டுள்ளார்.
எந்த ரயிலில் அல்லது ரயில் நிலையத்தில் அவர் அந்த உணவை வாங்கினார் என அதில் குறிப்பிடப்படவில்லை. எனினும் இந்த போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.