Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெங்களூரு தண்ணீர் பிரச்சனையை தீர்த்து வைத்த வருண பகவான்.. கனமழையால் மக்கள் மகிழ்ச்சி..!

Mahendran
வெள்ளி, 3 மே 2024 (16:52 IST)
கடந்த சில நாட்களாக பெங்களூரில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடிய நிலையில் தற்போது அங்கு நல்ல மழை பெய்து கொண்டு வருவதாகவும் இன்னும் சில நாட்களுக்கு பெங்களூரில் மழை பெய்யும் என்று கூறப்படுவதால் தண்ணீர் பஞ்சத்தை வருண பகவான் தீர்த்து வைத்து விட்டதாக புறப்படுகிறது. 
 
பெங்களூரில் வரலாறு காணாத தண்ணீர் பஞ்சம் இருந்த நிலையில் பெங்களூர் மக்கள் மிகவும் திண்டாட்டத்தில் இருந்தனர். இந்த நிலையில் இன்று பெங்களூரில் நல்ல பெயராக மழை பெய்து வரும் நிலையில் வரும் நாட்களிலும் மழை தொடரும் என்று கூறப்படுகிறது
 
5 மாதங்களுக்கு பிறகு பெங்களூரில் நேற்றும் இன்றும் மழை பெய்துள்ளது என்றும் குறிப்பாக இந்திரா நகர், விஜயநகர் பகுதியில் நல்ல மழை பெய்ததால் குளிர்ச்சியான தட்பவெட்ப நிலை நிலவு வருவதாகவும் தெரிகிறது 
 
நேற்று இரவு பெங்களூரில்  4.3 மில்லி மீட்டர் மழை பெய்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பெங்களூரில் நிலவும் வானிலையை பார்க்கும் போது இன்னும் இரண்டு வாரங்களில் கனமழைக்குக் வாய்ப்பு இருப்பதாகவும் அதனால் நல்ல மழை பெய்யும் என்று கூறப்படுகிறது 
 
இதனால் பெங்களூரில் தண்ணீர் கஷ்டம் இப்போதைக்கு இருக்காது என்று தெரிய வருகிறது. இதனால் பெங்களூர் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 மகளிர் உதவித்தொகை: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்

நவீன ரோபோ சுற்றுலா வழிகாட்டி.. ஜிண்டால் குளோபல் யுனிவர்சிட்டி மற்றும் ஐஐடி மெட்ராஸ் முயற்சி..

வேலைநிறுத்தம் செய்யும் மருத்துவர்களின் கோரிக்கைகள்.. அமைச்சர் மா சுப்பிரமணியன் பேச்சுவார்த்தை..!

டாக்டர்களுக்கும், நோயாளிகளுக்கும் சரியான புரிதல் இருக்க வேண்டும்: தமிழிசை

மருத்துவர்கள் தாக்கப்படும்போது நடவடிக்கை எடுக்காததால் இன்னொரு சம்பவம்: அண்ணாமலை

அடுத்த கட்டுரையில்
Show comments