Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ராமானுஜருக்கு ரூ1000 கோடி செலவில் சிலை

Advertiesment
ராமானுஜர்
, ஞாயிறு, 18 நவம்பர் 2018 (15:47 IST)
சமீபத்தில் இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லாபாய்  பட்டேல் அவர்களுக்கு குஜராத்தில் ரூ.3000 கோடி செலவில் பிரமாண்டமான சிலை வைக்கப்பட்டிருந்த நிலையில் விரைவில் ராமானுஜருக்கு ரூ.1000 கோடி செலவில் பிரமாண்டமான சிலை வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இன்றைக்கும் சில ஊர்களில் தீண்டாமை இருப்பதாக கூறப்படும் நிலையில் 1000 ஆண்டுகளுக்கு முன்னரே தீண்டாமைக்கு குரல் கொடுத்தவர் ராமானுஜர். இந்தியாவின் பல பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் செய்து ஆன்மீக வழியில் சமத்துவத்தை பரப்பிய ராமானுஜர் தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளுக்கும் வருகை தந்துள்ளார்.

ராமானுஜர்
இந்த நிலையில் ராமானுஜரின் 1000வது ஆண்டுவிழாவை முன்னிட்டு 1000 கோடி ரூபாய் செலவில் பஞ்சலோக சிலை வைக்க திருதண்டி சின்ன ஜீயர் தலைமையில் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த சிலையின் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருவதாகவும் விரைவில் இந்த சிலை நிறுவும் தேதி அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உடனடியாக மதுக்கடைகளை மூட உத்தரவு: தமிழக அரசின் திடீர் ஆணை