ராமர் கோவில் டிரஸ்ட் தலைவருக்கு கொரோனா
தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு மிக அதிகமாகி வருகிறது. இந்தியாவில் தற்போது 23 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சமீபத்தில் அயோத்தியில் ராமர் கோவில் பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர். அதேபோல் ராமர் கோவில் டிரஸ்ட் தலைவர் உள்பட ராம பக்தர்களும் அதிகமானோர் கலந்து கொண்டனர்
இந்த நிலையில் ராமர் கோயில் டிரஸ்ட் தலைவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராமர் கோவில் டிரஸ்ட் தலைவர் நிர்த்யா கோபால் தாஸ் என்பவருக்கும் கடந்த சில நாட்களாக கொரோனா அறிகுறி இருந்ததாகவும் இதனையடுத்து அவருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவில் முன்னிலை வகித்தவர் தான் இந்த நிர்த்யா கோபால் தாஸ் என்பதும் பிரதமர் மோடியுடன் நிர்த்யா கோபால் தாஸ் மேடையை பகிர்ந்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து பிரதமர் மோடிக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்படுமா? என்ற கேள்வி எழுந்து உள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது