சரித்திர காலத்தில் இருந்து இப்போது வரை அயோத்தி மக்கள் சுயநலவாதிகள் மற்றும் துரோகம் செய்பவர்கள் என்று ராமாயணம் தொடரில் லட்சுமணன் ஆக நடித்த நடிகர் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இராமாயணம் தொடரின் லட்சுமணன் கேரக்டரில் நடித்த நடிகர் சுனில் லகேரி என்பவர் இது குறித்து கூறிய போது வனவாசம் சென்று வந்த சீதையை சந்தேகப்பட்டவர்கள் அயோத்தி மக்கள் தான் என்றும் இவர்கள் எப்போதும் சுயநலவாதிகள் மற்றும் துரோகம் செய்பவர்கள் என்றும் தெரிவித்தார்.
கடவுளை மறுப்பவர்களை நீங்கள் என்னவென்று அழைப்பீர்கள், சுயநலவாதிகள் என்று தானே அழைக்க முடியும். அயோத்தியின் மக்கள் எப்போதும் தங்கள் மன்னனுக்கு துரோகம் செய்பவர்கள் என்பதற்கு வரலாற்று ஆதாரம் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
ராமர் கோயில் அமைந்துள்ள பைசாபாத்தில் பாஜக தோல்வி அடைந்ததை அடுத்து நடிகர் சுனில் லாகேரி இந்த கருத்தை ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார். இந்த தொகுதியில் சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த அவதேஷ் பிரசாத் என்பவர் ஐந்து லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.