Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாத்தா எஸ்.எம்.கிருஷ்ணாவை தொடர்ந்து பேத்தி ரம்யாவும் கட்சி மாறுகின்றாரா?

Webdunia
வியாழன், 27 ஏப்ரல் 2017 (05:27 IST)
சமீபத்தில் முன்னாள் கர்நாடக மாநில முதல்வரும், காங்கிரஸ் பிரமுகரான எஸ்.எம்.கிருஷ்ணா காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். இவருக்கு விரைவில் கவர்னர் பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.



 


இந்த நிலையில் எஸ்.எம்.கிருஷ்ணாவின் பேத்தியும் கட்சி மாறுவாரா? என்று கேள்வி எழுந்துள்ளது. அதற்கேற்றார்போல் ஃபேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் எப்போதும் பரபரப்பாக இருக்கும் ரம்யா, கடந்த 4 மாதங்களாக ரம்யா விலகியே இருந்தார். மேலும் அவர் மீது போடப்பட்ட தேச துரோக வழக்கை கீழமை நீதிமன்றம் சமீபத்தில் தள்ளுபடி செய்துவிட்டது. எனவே ரம்யாவும் விரைவில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் சேருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ரம்யா தனது டுவிட்டர் பக்கத்தில் பாஜக-வின் கொள்கைகளுக்கு எதிரான கருத்துக்களை பதிவிட்டுட்டுள்ளார். ஆனாலும் பாஜகவிடம் பேரம் பேசவே அவர் இவ்வாறு பதிவு செய்து வருவதாக கூறப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை தாராவியில் விஜய் வசந்த், திருமாவளவன் பிரச்சாரம்.. இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு..!

இண்டிகோ விமானங்களில் முதல்முறையாக பிசினஸ் கிளாஸ் சேவை.. டெல்லியில் இருந்து முதல் விமானம்..!

தனிப்பாடமாக கணினி அறிவியல்.. பள்ளிகளில் கணினி பட்டதாரி ஆசிரியர்கள்: டாக்டர் ராமதாஸ் கோரிக்கை..!

சிறப்பு பேருந்துகளை இயக்கியதால் ரூ.50 கோடி நஷ்டம்: அமைச்சருக்கு சிஐடியு கடிதம்

இடது கண்ணுக்கு பதிலாக வலது கண்ணில் அறுவை சிகிச்சை… மருத்துவர் மீது பகீர் புகார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments