Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சோனியாவும், ராகுலும் ஜாமீனில் தான் உள்ளார்கள்: பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத்

Advertiesment
சோனியா காந்தி

Mahendran

, புதன், 16 ஏப்ரல் 2025 (13:10 IST)
சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் தற்போது ஜாமீனில் தான் உள்ளனர் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் என பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
நேஷனல் ஹெரால்ட் வழக்கின் பண முறைகேடு குற்றச்சாட்டின் கீழ் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி உள்ளிட்டவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், நேற்று அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. 
 
இது குறித்து ரவிசங்கர் பிரசாத் பேசியபோது, காங்கிரஸ் கட்சிக்கு எதிர்ப்பை தெரிவிக்க உரிமை உண்டு, ஆனால் அதே நேரத்தில் அரசின் சொத்துக்களை அபகரித்து நேஷனல் ஹெரால்டுக்கு கொடுக்கும் உரிமை இல்லை. முழு சொத்துகளும் ஒரு குடும்பத்தின் கைகளில் இருப்பதற்கு கார்ப்பரேட் சதி தீட்டப்பட்டு இருக்கிறது. 
 
சோனியா காந்தியும், ராகுல் காந்தியும், ஜாமீனில் தான் உள்ளனர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இந்த வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் அவர்கள் நாடியும் எந்த பயனும் இல்லை. சட்டம் அதன் கடமையை செய்யும். சட்டத்திற்கு முன் ராகுல், சோனியா பதில் அளிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
 
நேஷனல் ஹெரால்டுக்கு பணம் அளிப்பவர்கள் நல்லவர்கள் அல்ல, எனவே, நரேந்திர மோடி அரசு அதன் கடமையை சரியாக செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.

Edited by Mahendran
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இருட்டுக்கடையை எழுதிக்கேட்டு கொலை மிரட்டல்! உரிமையாளர் மகள் வரதட்சணை கொடுமை புகார்!