கேரள மாநிலத்தில் மழையில் சிக்கிய மூன்று கர்ப்பிணிப் பெண்களை மீட்புப் படையினர் மீட்டுள்ளனர்.
நமது அண்டை மா நிலமான கேரளத்தில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான கம்யூனிஸ்ட் ஆட்சி நடந்து வருகிறது.
இந்த நிலையில், தென்மேற்கு பருவமழை கேரளாவில் கடந்த ஜூன் 1 ஆம் தேதி தொடங்கிய நிலையில், தற்போது பருவ மழை தீவிரமடைந்துள்ளது.
இந்த நிலையில், பழங்குடியின மக்கள் வசிக்கும் வனப்பகுதியில் கனமழை பெய்ததால் அங்கு வெள்ளம் சூழ்ந்தது. இதில், அப்பகுதியைச் சேர்ந்த 3 கர்ப்பிணிப் பெண்கள் பாதிக்கப்பட்டனர்.
இதை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸாரும் மீட்புப் படையினரும் மூன்று கர்ப்பிணிப் பெண்களையும் மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதில், ஒரு பெண் குழந்தையைப் பிரசவித்ததாக தகவல் வெளியாகிறது. மற்ற இரு பெண்களும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 3 கர்ப்பிணிகளை மீட்ட மீட்பு படையினருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது.