சண்டிகரில் விஷால் என்பவரின் கார் கண்ணாடியை உடைத்து, ரூ.85,000 ரொக்கம் மற்றும் தங்க நகைகளை திருடிச் சென்ற கொள்ளையர்கள், இன்று காரின் கண்ணாடியை மட்டுமே உடைத்துள்ளோம். நாளை உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் அடித்து, வீட்டையும் உடைப்போம்" என்று மிரட்டிவிட்டு சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,.
செப்டம்பர் 19 அன்று திடீரென கார் கண்ணாடி உடையும் சத்தம் கேட்டு விஷால் வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்தபோது நான்கு அல்லது ஐந்து பேர் தனது காரின் கண்ணாடியை உடைப்பதை கண்ட அவர், அவர்களை பிடிக்க முயன்றுள்ளார்.
ஆனால் திருடர்கள் காரில் இருந்த ரூ.85,000 ரொக்கம், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவு புத்தகம் உள்ளிட்ட முக்கியமான ஆவணங்கள் இருந்த பணப்பை, மற்றும் அவரது மனைவியின் தங்க கம்மல் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிவிட்டனர்.
அப்போது, "இன்று காரின் கண்ணாடியை மட்டுமே உடைத்துள்ளோம். நாளை உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் அடித்து, வீட்டையும் உடைப்போம்" என்று மிரட்டிவிட்டு, திருடர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.
இதுகுறித்து விஷால் கொடுத்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அங்குள்ள சிசிடிவி காட்சிகளின் மூலம் குற்றவாளிகள் குறித்து விசாரணை நடந்து வருகிறது.