குஜராத்தில் ஆட்சிக்கு வந்தால் அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூபாய் ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியை நிறுவனருமான அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
டெல்லி மற்றும் பஞ்சாப் ஆகிய இரண்டு மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்த ஆம் ஆத்மி கட்சி, அடுத்ததாக குஜராத் கோவா உள்பட ஒருசில மாநிலங்களில் ஆட்சியை பிடிக்க தீவிரமாக வேலை செய்து வருகிறது
இந்த நிலையில் அடுத்த ஆண்டு குஜராத் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால், அம்மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க திட்டமிட்டு வருகிறது.
இந்த நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடியாக குஜராத்தில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் அனைவருக்கும் மாதம் ரூபாய் ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என்றும் இது இலவசம் அல்ல என்றும் மக்களின் உரிமை என்றும் கூறியுள்ளார்
மக்கள் பணம் மக்களுக்கே செல்ல வேண்டும் என்றும் சுவிஸ் வங்கிக்கு செல்ல கூடாது என்றும் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .