தமிழ்நாடு அரசு சார்பில் தலா ரூ.1 கோடி பரிசு தொகை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
சென்னையில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி கடந்த ஜூலை 28 ஆம் தேதி தொடங்கி விமர்சையாக நடைபெற்றது. ஆகஸ்டு 8 போட்டிகள் நிறைவடைந்த நிலையில் போட்டியின் இறுதி நிகழ்ச்சி நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் விமர்சையாக நடைபெற்றது.
இந்தியாவில் செஸ் ஒலிம்பியட் நடைபெறுவதால் இந்திய வீரர்கள் கணிசமான அளவில் பதக்கங்களை வெல்ல வேண்டும் என பரவலான எதிர்பார்ப்பு இருந்தது. முக்கியமாக இளம் செஸ் வீரர் பிரக்யானந்தா வெகுவாக எதிர்பார்க்கப்பட்டார். ஆனால் அவர் வெண்கல பதக்கம் வென்றார். குகேஷ் மற்றும் நிகள் சரின் தங்க பதக்கமும், எரிகேசி அர்ஜூன் வெள்ளிப்பதக்கமும் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தனர்.
இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் தொடரில் வெண்கலம் பதக்கம் வென்ற இரு இந்திய அணிகளுக்கும் தலா ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். பொதுப்பிரிவில் வெண்கலம் வென்ற இந்திய பி அணி, பெண்கள் பிரிவில் வெண்கலம் வென்ற இந்திய ஏ அணிக்கு பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து அறிவித்தது போல செஸ் ஒலிம்பியாடில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஓபன் பி அணி, மகளிர் ஏ அணிகளுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் தலா ரூ.1 கோடி பரிசு தொகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.