குடும்ப தலைவிகளுக்கு ஒவ்வொரு மாதமும் பணம் கொடுக்கப்படும் என முதன்முதலாக கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் தான் தெரிவித்தது. அதை பார்த்து தான் திமுக கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தலின்போது குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 என தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டது.
இதனையடுத்து இந்த வாக்குறுதியை இரண்டு வருடங்களாக நிறைவேற்ற முடியாத நிலையில் இருந்தபோது வேறு வழி இன்றி கடந்த செப்டம்பர் மாதம் முதல் குடும்பத் தலைவிகளுக்கு அதுவும் தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்து வருகிறது
இந்த நிலையில் இந்த வாக்குறுதியை கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களும் கடைப்பிடித்து வருகின்றன. தெலுங்கானா உள்பட ஐந்து மாநிலங்களில் நடைபெற்று வரும் தேர்தலில் ஒவ்வொரு அரசியல் கட்சியும் குடும்ப தலைவர்களுக்கு பணம் கொடுப்பதை தங்கள் தேர்தல் வாக்குறுதியாக தெரிவித்து வருகின்றன
அந்த வகையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் குடும்ப தலைவிகளுக்கு ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று பாஜகவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் இன்று வெளியிட்டுள்ள சத்தீஸ்கர் சட்டப்பேரவை தேர்தல் அறிக்கையில் நெல் ஒரு குவிண்டால் ரூபாய் 3100க்கு கொள்முதல் செய்யப்படும் என்றும் குடும்ப தலைவிகளுக்கு ஆண்டுக்கு ரூபாய் 12000 வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.