2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான காலக்கெடு செப்டம்பர் 30ஆம் தேதி முடிவடைய இருக்கும் நிலையில் இந்த காலத்தை நீட்டிக்கும் எண்ணம் எதுவும் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக மே 19ஆம் தேதி ரிசர்வ் வங்கி அறிவித்தது. எனவே செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் பொதுமக்கள் தங்களிடம் உள்ள 2000 ரூபாய் நோட்டை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளுமாறு அறிவுறுத்திருந்தது.
இந்த நிலையில் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான காலக்கெடுப்பு உண்டா என்பது குறித்து பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய நிலையில் அப்படி ஒரு திட்டம் அரசிடம் இல்லை என்று மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ சவுத்ரி தெரிவித்தார்.
மேலும் 2000 ரூபாய் நோட்டுகளை போல மற்ற நோட்டுகளை திரும்ப பெரும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.