ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டியில் வெள்ளி வென்ற இந்திய வீரர் ரவிக்குமார் தாகியா அவர்களுக்கு பரிசுகள் குவிந்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
நேற்று நடைபெற்ற ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டியில் ரஷ்ய வீரருடன் மோதிய இந்தியாவின் ரவிக்குமார் தாகியா தோல்வியடைந்தார். இருப்பினும் அவர் இரண்டாவது இடத்தை பெற்றதை அடுத்து அவருக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. இதனை அடுத்து இந்தியாவுக்கு கிடைத்த இரண்டாவது வெள்ளிப்பதக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
ரவிக்குமார் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதால் அம்மாநில அரசு அவருக்கு ரூபாய் நான்கு கோடி பரிசு அளித்து உள்ளது. அது மட்டுமின்றி அரசு பணிகளில் அவர் விரும்பும் இடத்தில் விரும்பும் பணியை கொடுக்கவும் உத்தரவிட்டு உள்ளது. இதனை அடுத்து ரவிக்குமாருக்கு பரிசுகள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
அதேபோல் நேற்று நடைபெற்ற ஹாக்கி போட்டியில் இந்தியா வெண்கல பதக்கம் வென்ற்தை அடுத்து ஹாக்கி அணியில் உள்ள ஹரியானா வீரர்களுக்கு ரூபாய் 2.5 கோடி பரிசு வழங்கப்படும் என்றும் அரியானா மாநில அரசு அறிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே பஞ்சாப் மாநில அரசு பஞ்சாப் வீரர்களுக்கு தலா ஒரு கோடி அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது