அதானி குழுமத்தின் ரூ.7374 கோடி கடனை அதானி திரும்ப செலுத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனை அடுத்து அதானி குழுமங்களின் பங்குகள் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்னால் அமெரிக்காவின் ஹண்டன்பர்க் என்ற ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட அறிக்கை காரணமாக அதானி குழுமங்களின் பங்குகள் மிகப்பெரிய அளவில் சரிந்தன என்பதும் இதனால் ஹிண்டன்பர்க் நிறுவனத்திற்கு மிகப்பெரிய லாபம் என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில் அதானி அதிரடியாக சில நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் முதல் கட்டமாக பங்குகளை அடமானம் வைத்து வாங்கிய கடனில் ரூ.7374 கோடி அதானி குழுமம் திரும்ப செலுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதுவரை ரூ.16,500 கோடி கடன் திரும்ப செலுத்தப்பட்டுள்ளதாக அதானி குழுமம் விளக்கம் அளித்துள்ளது. இதனை அடுத்து கடந்ஹ இரண்டு நாட்களாக அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்து வருகிறது என்பதும் அதில் முதலீடு செய்தவர்கள் நிம்மதி அடைந்துள்ளனர் என்பதை குறிப்பிடத்தக்கது.