கொரோனா காலத்தில் கொள்முதல் செய்யப்பட்ட மருந்துகள் எவ்வளவு என்ற கேள்விக்கு 40 ஆயிரம் பக்கத்தில் ஆர்.டி.ஐ பதில் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
தகவல் அறிவு அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் எந்த கேள்வி கேட்டாலும் பதில் கிடைக்கும் என்பது தெரிந்ததே. அந்த வகையில் மத்திய பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த தர்மேந்திரா சுக்லா என்பவர் கொரோனா காலத்தில் கொள்முதல் செய்யப்பட்ட மருந்துகள் எவ்வளவு என்ற கேள்வியை கேட்டிருந்தார்.
இந்த கேள்விக்கு 40,000 பக்கங்களுக்கு பதில் அளித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை நிர்வாகிகள் அசர வைத்துள்ளனர் இந்த கேள்விக்கான பதிலை பிரிண்ட் செய்து கார் முழுவதும் நிரப்பி மனுதாரர் வீட்டுக்கு எடுத்துச் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.