ஸ்பூட்னிக் வி மருந்து பரிசோதனைக்காக அடுத்த வாரம் இந்தியா கொண்டுவரப்பட உள்ளது.
உலகையே முடுக்கியுள்ள கொரோனா வைரஸுக்கு ரஷியா ஸ்புட்னிக்-5 என்ற தடுப்பூசியை உருவாக்கியது. இந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கிற 3-வது இறுதிக்கட்ட மருத்துவ பரிசோதனையும் நடத்தப்பட்டது.
இந்த சோதனையின்போது 31 ஆயிரம் தன்னார்வலர்களுக்கு தடுப்பூசி போட்டு சோதிக்கப்பட்டது. இதற்கு மத்தியில், கொரோனா பாதிப்புக்கு ஆளாகாமல் தடுப்பதற்கு மக்கள் பயன்பாட்டுக்காக இந்த தடுப்பூசியின் வினியோகம் தொடங்கி உள்ளது எனவும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த ஸ்பூட்னிக் வி-யின் 2 மற்றும் 3வது கட்ட மருத்துவ பரிசோதனை நடத்துவதற்கு இந்தியாவை தலைமையிடமாக உருவாக்க உள்ளதாக கூறப்பட்டது. அதன் படி தற்போது இந்த மருந்து பரிசோதனைக்காக அடுத்த வாரம் இந்தியா கொண்டுவரப்பட உள்ளது.
இந்த மருந்திற்கான உற்பத்தி உரிமையை பெற்றுள்ள டாக்டர் ரெட்டிஸ் ஆய்வக நிறுவனம் பரிசோதனைக்கான அனுமதியை பெற்றுவிட்டது. கான்பூரில் உள்ள கணேஷ் சங்கர் வித்யார்த்தி மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு வரப்படும் தடுப்பூசி தன்னார்வலர்களுக்கு உட்படுத்தப்பட உள்ளது.