Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொழிலாளிகளுக்கு பாதுகாப்பு ? பதற்றத்தை ஏற்படுத்திய ஆனந்த் விகார் நிலையம் ?

Webdunia
சனி, 28 மார்ச் 2020 (22:04 IST)
தொழிலாளிகளுக்கு பாதுகாப்பு ? பதற்றத்தை ஏற்படுத்திய ஆனந்த் விகார் நிலையம் ?

இந்தியாவில் கொரொனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 743 ல் இருந்து 748 ஆக அதிகரித்துள்ளது.  இதில், 66 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் ஊரடங்கு வரும் ஏப்ரல் 14 ஆம் தேதிவரை அமலில் உள்ளது. அதனால் மக்கள் அவரவர் வீடுகளில் உள்ளனர்.

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் கூலி வேலை செய்கின்றனர். இதில், கட்டிட தொழிலாளர்கள், விவசாயிகள், என எண்ணற்ற தொழில் செய்வோர் தினும் உண்பதற்கும் குடும்பத்தை சமாளிப்பதற்கும் பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில், தொழிலாளர்கள் பலரும் வேறு வேறு ஊர்கள் இருப்பதால், அவர்கள் அனைவரும் சொந்த ஊர்களுக்கு திருப்புவதில் பெரும் சிக்கல் உருவாகியுள்ளது.உத்தரபிரதேசத்தில் கூட சிலர் பேருந்து வசதி  இல்லாத காரணத்தால் நூறு கி.மீ தூரம் நடந்துசெல்வதாக செய்திகள் வெளியானது.

ஊரடங்கு உத்தரவு காரணமாக சொந்த ஊருக்குச் செல்லமால்,வேலையில்லாமல் கையில் காசும் இல்லாமல் தவித்து வரும் தொழிலாளர் நடந்து செல்வது குறித்து அறிந்த மத்திய உள்துறை அமைச்சகம், உ.பி மாநில அரசுக்கு சில உத்தரவிட்டது.

அதன்படி, ஆயிரக்கணக்கான தொழிலார்கள் உ.பி மாநிலத்தில் உள்ள டெல்லி எல்லையருகே ஆனந்த் விஹார் என்ற பேருந்துநிலையத்தில் குவிந்தனர்.

ஏற்கனவே ஒரு மீட்டர் இடைவெளி நிற்க வேண்டுமென அரசும் மருத்துவர்களும் கூறியுள்ளபோதிலும் கொரோனாவில் விபரீதம் புரியாமல் பலர் கூட்டம் கூட்டமாக பேருந்துக்காக சென்றுள்ளது இந்தியாவில் மேலும் ஆபத்தை உருவாக்கிவிடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஊரடங்கு உத்தரவின்போது ஏழை மக்களின் அன்றாட உணவுக்கு வழிவகை செய்யவேண்டியது மத்திய மாநில அரசின் கடமையாகும் என பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைவருக்கும் ரூ.1000 என்பது திமுக அரசின் நாடகம்: டாக்டர் ராமதாஸ்

பட்டப் பகலில் அரங்கேறும் குற்றச் செயல்கள்.. கத்திக்குத்து சம்பவம் குறித்து தவெக விஜய்..!

என் மகன் செய்தது தப்புதான், ஆனால் மருத்துவர் என்னை திட்டுவார்: கத்தியால் குத்திய விக்னேஷ் தாய் பேட்டி..!

அமைச்சர் பேச்சுவார்த்தை எதிரொலி: மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்..!

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 மகளிர் உதவித்தொகை: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்

அடுத்த கட்டுரையில்
Show comments