Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடுப்பூசியின் 2 டோஸ்கள் உயிருக்கு பாதுகாப்பு !

Webdunia
சனி, 3 ஜூலை 2021 (17:36 IST)
கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசியின்  2 டோஸ்கள் போட்டுக்கொண்டால் உயிருக்கு உத்தரவாத என நிதி ஆயோக் உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் நாள்தோறும் கொரொனா இரண்டாம் அலைப்பரவல் அதிகரித்து வந்த நிலையில்  இரண்டு வாரங்களாகக் குறைந்து வருகிறது.

அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தொற்றுப் பரவலைக் குறைக்க மத்திய அரசு அந்தந்த மாநில அரசுகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், அனைத்து மாநிலங்களிலும்  45  வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. பிரதமர் கூறியபடி 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் கர்ப்பிணிகள் தடுப்பூசி போடலாம் என மத்திய சுகாதாரத்துறை நேற்று அனுமதி அளித்துள்ளது.

அதில். கோவின் செயலியில் பதிவு செய்தோ அல்லது அருகில் உள்ள தடுப்பூசில் மையத்திற்கு நேரில் சென்றோ தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என அறிவித்துள்ளது.  இத்தனை நாட்களாகப் கர்ப்பிணிப் பெண்கள் கேள்வி எழுப்பிய நிலையில் இன்று இந்த அறிவிப்பு நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தற்போது  மத்திய நிதி ஆயோக் உறுப்பினர் ஒரு முக்கிய தகவல் தெரிவித்துள்ளார். அதில், கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசியின்  2 டோஸ்கள் போட்டுக்கொண்டால் 98% உயிருக்குப் பாதுகாப்பு உறுப்பினர் வி.கே.பால் தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூச்சுவிட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்த விவகார்ம: மருத்துவர் சஸ்பெண்ட்..!

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை..!

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments