Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Wednesday, 21 May 2025
webdunia

சாய் பாபவுக்கு சானிடைசரில் அலங்காரம்: வைரல் புகைப்படம்!

Advertiesment
sai baba temple
, புதன், 28 ஜூலை 2021 (13:29 IST)
பெங்களூரு ஜே.பி.நகரில் உள்ள சாய்பாபா கோவிலில் சாய்பாபாவுக்கு மாஸ்க் மற்றும் சானிடைசர் பாட்டில்கள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. 

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 50 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. 
sai baba temple
தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 43,654  பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 3,14,84,605 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா மூன்றாம் அலை இன்னும் ஓரிரு வாரங்களில் வரக்கூடும் என்று எய்ம்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.
sai baba temple
இந்நிலையில் பெங்களூரு ஜே.பி.நகரில் உள்ள சாய்பாபா கோவிலில் கொரோனாவில் இருந்து மக்கள் விடுபடவும், இந்தியாவில் 3 வது அலை உருவாகாமல் இருக்கவும் பிரார்த்தனை செய்து சாய்பாபாவுக்கு 3,00,000 லட்சம் மாத்திரைகள், 10000 முகக்கவசங்கள், 2000 சானிடைசர் பாட்டில்கள் மற்றும் உணவு தானியங்கள், பழங்கள், மற்ற உணவு பொருட்களைக் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டன. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இனிமே எல்லா ஷோவையும் பார்க்கலாம்! – ப்ளானை மாற்றிய டிஸ்னி ஹாட்ஸ்டார்!