Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சானியா மிர்சாவின் பதவியை பறிக்க வேண்டும் : பாஜக போர்க்கொடி

Webdunia
செவ்வாய், 19 பிப்ரவரி 2019 (09:54 IST)
டென்னிஷ வீராங்கனை சானியா மிர்சா இந்திய பெண்கள் டென்னிஷில் சர்வதேச அளவில் புகழ்பெற்று விளங்கினார். பல்வேறு சாம்பியன் பட்டங்களையும் கைப்பற்றி இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார். சில வருடங்களுக்கு முன் பாகிஸ்தான் வீரர் சோகைப் மாலிக்கை திருணம் செய்துகொண்டார். 
இந்நிலையில் காஷ்மீர் பகுதியில் உள்ள புல்வாமாவில் கடந்த வியாழக்கிழமை அன்று நடந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இது நாடு முழுதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
 
இதனையடுத்து டென்னிஷ் வீராங்கனை சானியாவுக்கு எதிராக பலரும் கோஷங்களை எழுப்பினர்...
 
இதுகுறித்து கருத்து தெரிவித்த சானியா...தீவிரவாத தாக்குதலை கண்டித்து நான் மொட்டை மாடியில் நின்று கொண்டு கூவ வேண்டுமா? என்று தனது டுவிட்டரில் ஆவேசமான ஒரு டுவீட்டை பதிவு செய்தார்.
 
’காஷ்மீர் தாக்குதலை கண்டித்து பல தலைவர்களும், பிரபலங்களும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் சானியா மிர்சாவிடம் இருந்து ஒரு இரங்கல் செய்தியோ, கண்டன அறிக்கையோ வெளிவரவில்லை என்பதை சில நெட்டிசன்கள் சுட்டிக்காட்டினர். இதற்கு பதிலடி தரும் வகையில் ஒரு நீண்ட விளக்கத்தை சானியா அளித்திருந்தார்.’
 
அதில் கூறியுள்ளதாவது ’பிரபலங்கள் என்றாலே தங்கள் தேசிய பற்றை காட்ட டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் தீவிரவாத தாக்குதல்களை கண்டித்து பதிவு செய்ய வேண்டும் என பலர் விரும்புகின்றனர். அவர்களுக்கு நான் கூறிக்கொள்வது என்னவென்றால் உங்களுடைய வெறுப்பு மற்றும் கோபத்தை வேறெங்கும் காட்ட வாய்ப்பு கிடைக்காததால், எங்களை போன்ற பிரபலங்கள் மீது காட்டுகிறீர்கள். தீவிரவாத தாக்குதல்களை பொதுவெளியில் கண்டிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. எனது வீட்டு மொட்டை மாடி மீது நின்று கொண்டு தீவிரவாதத்திற்கு எதிராக கூவ வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு. தீவிரவாதத்தை சமூக வலைதளங்களில் கூவிக் கூவி எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. தீவிரவாதம் எந்த வகையில் இருந்தாலும் அது கண்டிக்கத்தக்கதே. அதேபோல், தீவிரவாதத்தை பரப்புபவர்களும் வன்மையான கண்டனத்துக்குரியவர்களே.
 
சரியாக சிந்திக்கும் அனைவரும் தீவிரவாதத்துக்கு எதிரானவர்கள்தான். நான் எனது நாட்டுக்காக வியர்வை சிந்தி விளையாடுகிறேன். அப்படித்தான் எனது நாட்டுக்கு நான் சேவை புரிகிறேன். தாக்குதலில் உயிரிழந்த சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு ஆதரவாக நான் நிற்கிறேன். நான் தற்போது அமைதிக்காக பிரார்த்தனை செய்கிறேன்' என்று சானியா மிர்சா கூறியிருந்தார்.
 
இந்நிலையில் சானியாவை தெலுங்கானா மாநில சிறப்பு தூதர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என அம்மாநில பாஜகவினர் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.இதனால் தெலுங்கானாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நவம்பர் 12 முதல் கனமழை சூடு பிடிக்கும்.. சென்னை மக்கள் ஜாக்கிரதை: தமிழ்நாடு வெதர்மேன்..!

நீட் பயிற்சி மாணவியை 6 மாதமாக பூட்டி வைத்து பாலியல் வன்கொடுமை..2 ஆசிரியர்கள் கைது!

இன்று வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி! 7 நாட்களுக்கு கனமழை..!

தவெக கொடிகள், துண்டுகள்.. திருப்பூரில் குவியும் ஆர்டர்கள்..!

அமெரிக்க தேர்தலில் வெற்றி எதிரொலி: தெலுங்கு டிரம்ப் கோவிலில் சிறப்பு வழிபாடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments