மோடியை வீழ்த்த வேண்டும் என்பது எங்களது நோக்கம் இல்லை என்றும் பாசிச பாஜகவை வீழ்த்த வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கம் என்றும் காங்கிரஸ் வார் ரூம் தலைவர் சசிகாந்த் ஐஏஎஸ் தெரிவித்துள்ளார்.
வரும் தேர்தலில் பாஜக மற்றும் இந்தியா கூட்டணி கடும் போட்டி ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் வார் ரூம் தலைவராக சசிகாந்த் ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
அவர் கூறியபோது, இந்தியா கூட்டணியின் தலைவராக ராகுல் காந்தி வரவேண்டும் என்று நான் சொல்ல மாட்டேன், ஆனால் அதே நேரத்தில் மோடியை வீழ்த்த வேண்டும் என்பது எங்களது நோக்கம் அல்ல, பாஜக எனும் பாசிச சக்தியை ஒழிக்க வேண்டும் என்பதுதான் எங்களது பொது செயல் திட்டம் என்று தெரிவித்தார்.
மேலும் பாஜகவின் பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்டுள்ளது இந்தியா கூட்டணிக்கு சாதகமான அம்சம் என்றும் பத்தாண்டு காலத்தில் மோடி மீது மக்கள் அதிருப்தியில் இருப்பதால் மீண்டும் மோடி தான் பிரதமர் என்ற ஒரே ஒரு அறிவிப்பு எதிர்க்கட்சிகளுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியா கூட்டணியினர் ஒற்றுமையாக செயல்பட்டு ஒதுக்கீட்டில் புத்திசாலித்தனமாக செயல்பட்டால் கண்டிப்பாக பாஜகவை வீழ்த்த முடியும் என்றும் இந்தியா கூட்டணியினர் அதை புரிந்து கொண்டு காங்கிரஸ் கட்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து தொகுதிகளை ஒதுக்குவார்கள் என்று தான் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
சசிகாந்த் ஐஏஎஸ் அவர்களின் எண்ணப்படி இந்தியா கூட்டணிக்கு வெற்றி கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.