Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பதவியேற்கும் முன்னரே கைதாகும் பகுஜன் சமாஜ் கட்சி எம்பி?

Webdunia
செவ்வாய், 28 மே 2019 (07:25 IST)
நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற எம்பிக்கள் இந்த வார இறுதியில் பதவியேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் பதவியேற்கும் முன்னரே ஒரு எம்பி கைதாக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது
 
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள கோஷி என்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த அதுல்ராய். இவர் மீது கல்லூரி மாணவி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக வழக்கு ஒன்று தொடரப்பட்டு அந்த வழக்கு நீதிமன்ற விசாரணையில் உள்ளது. இந்த நிலையில் இந்த வழக்கில் தன்னை கைது செய்ய தடை விதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் அதுல்ராய் மனு ஒன்றை தாக்கல் செய்தார்
 
இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது அதுல்ராயை கைது செய்ய தடை விதிக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட் மறுத்துவிட்டது. இதனையடுத்து அவர் எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. எம்பி பதவியை ஏற்கும் முன்னரே அவர் கம்பி எண்ண வேண்டிய நிலை வருமோ? என்று அவரது தொகுதி மக்கள் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூச்சுவிட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்த விவகார்ம: மருத்துவர் சஸ்பெண்ட்..!

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை..!

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்