பிப்ரவரி 15ஆம் தேதி முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்படும் என மகாராஷ்டிர மாநில பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
இந்தியாவிலேயே மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் ஒமிக்ரான் பாதிப்பு அதிகமாக பரவி வருகிறது என்பதும் இதனை அடுத்து அம்மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ஏற்கனவே பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் தற்போது பிப்ரவரி 15ஆம் தேதி வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என மகாராஷ்டிர மாநில பள்ளி கல்வித்துறை சற்றுமுன் அறிவித்துள்ளது
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பள்ளி கல்லூரிகள் மூடப்படுவதாகவும், கல்லூரிகள், பள்ளிகள் திறப்பது குறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.