ஒமிக்ரானை விட அடுத்து வரும் வைரஸ் மிகவும் ஆபத்தானதாக இருக்கும் என இங்கிலாந்து விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் ஆபத்தானது என்றும் அதனை அடுத்து டெல்டா வைரஸ் ஆபத்தானது என்றும் அதனை அடுத்து ஒமிக்ரான் வைரஸ் ஆபத்தானது என்றும் அடுத்தடுத்து விஞ்ஞானிகள் தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையிலும் ஒமிக்ரானை விட ஆபத்தானது அடுத்து வரும் வைரஸ் ஆக இருக்கும் என இங்கிலாந்து விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்
எனவே அடுத்தடுத்து வரும் வைரஸ்களில் இருந்து பொதுமக்கள் தங்களை காத்துக்கொள்ள தடுப்பூசி செலுத்தி கொள்வது ஒன்றே வழி என்றும் இனி எதிர்காலத்தில் மாஸ்க் இல்லாமல் வெளியே செல்ல முடியாது என்ற நிலை ஏற்படும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.