Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மகாராஷ்டிராவில் திறக்கப்பட்டது பள்ளிகள்...!

மகாராஷ்டிராவில் திறக்கப்பட்டது பள்ளிகள்...!
, திங்கள், 24 ஜனவரி 2022 (10:17 IST)
மகாராஷ்டிராவில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. 

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கிய நிலையில் கடந்த 3 நாட்களாக குறைந்து வருகிறது. அதாவது ற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 3,06,064 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 3,95,43,328 ஆக உயர்ந்துள்ளது.
 
இப்படி இருக்க மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு பக்கம் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வந்தாலும் அம்மாநிலத்தில் 24 ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி மகாராஷ்டிராவில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. மும்பை, புனே உள்ளிட்ட நகரங்களில் பெற்றோர் விருப்பப்படி மாணவர்கள் பள்ளிக்கு அனுப்பி வைக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
முன்னதாக உலக சுகாதார மையம் பள்ளிகளை மூட வேண்டாம் என அறிவுறுத்தியதை அடுத்து குழந்தைகளின் கல்வி கற்றல் பாதிக்கக்கூடாது என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் அதே நேரத்தில் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை உடன் பள்ளிகள் இயங்கும் என்றும் அம்மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தடுப்புக் கட்டை மீது சலம்பிய பேருந்து! – வைரலாகும் வீடியோ!