Webdunia - Bharat's app for daily news and videos

Install App

6 - 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு: எங்கு தெரியுமா?

Webdunia
புதன், 28 ஜூலை 2021 (09:01 IST)
ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என உத்தரகாண்ட் மாநிலத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

 
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து விரைவில் பள்ளிகள் திறக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. 
 
இந்நிலையில் பள்ளிகள் திறப்பது குறித்து மாநில அரசுகளை முடிவு செய்து கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அத்னபடி குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்படுவதை தொடர்ந்து உத்தரகாண்ட்டில் பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. 
 
ஆம், ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என உத்தரகாண்ட் மாநிலத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணிவது சமூக இடைவெளியை பின்பற்றுவது ஆகியவை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

அண்ணா, எம்ஜிஆரின் அடுத்த அரசியல் வாரிசே! விஜய்யின் தொண்டர்கள் ஒட்டிய போஸ்டர்!

பழனி பஞ்சாமிர்தம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்: அமைச்சர் சேகர்பாபு விளக்கம்..!

வெறும் 3 நாட்கள் தான் காலாண்டு விடுமுறையா? பள்ளி மாணவர்கள் அதிருப்தி..!

அமேசான் செயலியில் ஏஐ உரையாடல்.. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments