மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, நாம் தமிழர் கட்சியை கடுமையாக விமர்சினம்
செய்ததற்கு இதுக்கெல்லாம் கருத்து சொல்ல முடியாது என சீமான் கூறியுள்ளார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் ஆங்கிலேயர்கள் காலத்தில் கைரேகை சட்டத்திற்கு எதிராக போராடி உயிரைவிட்டவர் நினைவிடத்தில் நினைவு தினத்துக்காக மரியாதை செலுத்த வைகோ மற்றிம் நாம் தமிழர் கட்சியினர் சென்றுள்ளனர்.
அப்போது வைகோ, நாம் தமிழர் கட்சியினர் தன்னை தமிழன் இல்லை கூறி சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புகின்றனர் என்று கூறி கடுமையாக விமர்சித்தார். இதனால் கோபமடைந்த நாம் தமிழர் நிர்வாகிகள் இந்த விஷயத்தை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் எடுத்துச் சென்றுள்ளனர்.
இதற்கு சீமான், தமிழ்நாடு முழுவதும் போராட்ட களமாக உள்ளது. நமது இனத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. இதையெல்லாம் நாம் எப்படி சரி செய்ய போகிறோம் என்று தெரியவில்லை. இந்த நிலைமையில் இதற்கு கருத்து சொல்ல என்ன இருக்கிறது. பெரியவர் ஏதோ கோபத்தில் அப்படி பேசுகிறார் என்று கூறியுள்ளார்.