பீஹார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தில் சஹதாய் புஸர்க் என்ற இடத்தில் சீமாஞ்சல் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. அதிகாலை 4 மணி அளவில் ஏற்பட்ட இவ்விபத்தில் 11 ரயில் பெட்டிகள் சேதமடைந்தன. இதில் 3 பெட்டிகள் தடம் புரண்டதாக தகவல் வெளியானது.
இவ்விபத்தில் இதுவரை 7 பேர் உயிரிழந்ததாகவும், காயமடைந்தவர்களை மீட்கும்பணி நடைபெற்று வருவதாகவும் செய்திகள் வெளியானது.
இந்நிலையில் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு ரூ. 1 லட்சம் மற்றும் விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.5 லட்சமும் வழங்கப்படும் என ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் அறிவித்துள்ளார்.
சீமாஞ்சல் விபத்தால் அவ்வழியே செல்லும் அனைத்து ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் பீஹார் மாநில முதல்வர் நிதிஸ்குமார் விபத்தில் சிக்கியவர்களை மீட்க தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய உத்தரவிட்டுள்ளார்.
இவ்விபத்துக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் ஆகியோர் இரங்கள் தெரிவித்துள்ளனர்.
சீமாஞ்சல் விபத்து பீஹார் மாநிலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.