பங்கு சந்தை கடந்த சில நாட்களாக ஏற்றத்தில் இருந்தது என்பதும் சென்செக்ஸ் 52 ஆயிரத்து தாண்டியது என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் நேற்று திடீரென சென்செக்ஸ் 300க்கும் மேலான புள்ளிகள் இறங்கியதால் முதலீட்டாளர்கள் சற்று அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் அதற்கு பதிலாக இன்று சென்செக்ஸ் மீண்டும் ஏறி உள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடையும் நேரத்தில் சென்செக்ஸ் 350 புள்ளிகள் உயர்ந்து 52 ஆயிரத்து 300 என்ற விலையில் என்ற அளவில் வர்த்தகம் முடிந்தது
அதேபோல் நிப்டி 102 புள்ளிகள் உயர்ந்து 15 ஆயிரத்து 737 என்ற நிலையில் முடிவடைந்துள்ளது நாளை இந்த வாரத்தின் இறுதி நாளில் பங்குச்சந்தை உயர வாய்ப்பு இருப்பதாக பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து கூறி வருகின்றனர். கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருவது மற்றும் உலக அளவில் பொருளாதாரம் உயர்ந்து கொண்டுவருவது ஆகியவையே பங்குச்சந்தை காரணமாக கூறப்படுகிறது