Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சேது சமுத்திர திட்டத்திற்காக ராமர் பாலம் அகற்றப்படாது: மத்திய அரசு உறுதி

Webdunia
வெள்ளி, 16 மார்ச் 2018 (11:31 IST)
மத்திய அரசு சேது சமுத்திர திட்டத்திற்காக ராமர் பாலத்தை அகற்றக்கூடாது என்றும், ராமர் பாலத்தை புராதன சின்னமாக அறிவிக்க வேண்டும் என்றும் பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்த வழக்கு கடந்த சில வருடங்களாக சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வரும் நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

இன்றைய விசாரணையின்போது, 'சேது சமுத்திர திட்ட விவகாரத்தில் ராமர் பாலத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்றும், ராமர் பாலத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்படும் என்றும் மத்திய அரசு பிரமாண பத்திரத்தை இன்று தாக்கல் செய்துள்ளது. எனவே ராமர் பாலத்திற்கு எந்தவித இடையூறும் வராது என்பது உறுதியாகியுள்ளது.

மேலும் ராமர் பாலத்தை இடிப்பதால் மத நம்பிக்கை மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என்ற சுப்பிரமணியன் சுவாமியின் கருத்தை மத்திய அரசு ஏற்று கொண்டுள்ளதாகவும் எனவே ராமர் பாலத்தை இடிக்காமல் மாற்றுப் பாதையில் சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைவருக்கும் ரூ.1000 என்பது திமுக அரசின் நாடகம்: டாக்டர் ராமதாஸ்

பட்டப் பகலில் அரங்கேறும் குற்றச் செயல்கள்.. கத்திக்குத்து சம்பவம் குறித்து தவெக விஜய்..!

என் மகன் செய்தது தப்புதான், ஆனால் மருத்துவர் என்னை திட்டுவார்: கத்தியால் குத்திய விக்னேஷ் தாய் பேட்டி..!

அமைச்சர் பேச்சுவார்த்தை எதிரொலி: மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்..!

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 மகளிர் உதவித்தொகை: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்

அடுத்த கட்டுரையில்
Show comments