பாலியல் தொழிலாளர்களுக்கு ஆதார் அட்டை வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
ஆம், பாலியல் தொழிலாளர்களுக்கு ஆதார் அட்டை வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஒவ்வொரு நபரும் அவர்களின் தொழில்முறை செயல்பாடுகளைப் பொருட்படுத்தாமல் கண்ணியத்துடன் நடத்துவதற்கான அடிப்படை உரிமை இந்நாட்டில் உள்ளது என்று உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது.
நீதிபதி எல் நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வு, இந்த உத்தரவி பிறப்பித்து பாலியல் தொழிலாளர்களின் ரகசியத்தன்மையை மதிக்க வேண்டும் என்றும் அவர்களின் அடையாளங்களை வெளியிடக்கூடாது என்றும் தீர்ப்பளித்தது. இந்த முடிவு பாலியல் தொழிலாளர்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கும் சமத்துவத்தைப் பேணுவதற்கும் பெரும் ஊக்கமாக வந்துள்ளது.
மேலும், எந்தவொரு அடையாளச் சான்றும் இல்லாத மற்றும் ரேஷன் மறுக்கப்படும் பாலியல் தொழிலாளர்களை அடையாளம் காணும் செயல்முறையைத் தொடருமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆதார் அடையாள அட்டையுடன் ரேஷன் பொருட்களும் வழங்கப்படுவதோடு வாக்காளர் அடையாள அட்டையும் வழங்கப்பட்டுள்ளதா என உறுதி செய்ய வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.