Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யுகேஜி குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை: பொதுமக்கள் ரயில் மறியலால் பரபரப்பு..!

Siva
புதன், 21 ஆகஸ்ட் 2024 (07:35 IST)
யுகேஜி குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர்களுக்கு கடும் தண்டனை பெற்று தர வேண்டும் என்று வலியுறுத்தி மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பொதுமக்கள் திடீரென ரயில் மறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் தானே பதிலாப்பூர் என்ற பகுதியில் உள்ள ஆரம்பப் பள்ளியில் படிக்கும் யுகேஜி பெண் குழந்தைகளுக்கு அதே பள்ளியில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது.

இந்த புகாரை அடுத்து பள்ளி ஊழியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து பெற்றோர்கள் ஒன்றாக சேர்ந்து திடீரென ரயில் மறியல் போராட்டம் செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நான்கு வயது குழந்தைகளுக்கு பாலியல் தொடுக்கும் பாலியல் தொல்லை கொடுக்கும் நபரை ஒரு மனிதராகவே கருதக்கூடாது என்றும் அந்த மனித மிருகத்தை உடனடியாக தூக்கில் இடவேண்டும் என்றும் போராட்டம் செய்த பொதுமக்கள் கோஷமிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனை அடுத்து போராட்ட களத்திற்கு வந்த காவல்துறையினர் பள்ளியில் பணிபுரியும் ஊழியர் மீது கண்டிப்பாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுமக்களை சமாதானப்படுத்தினர். இதனால் சில மணி நேரம் தானே பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மது ஒழிப்பு மாநாட்டால் கூட்டணி உடைந்தாலும் கவலையில்லை! - ஓப்பனாக சொன்ன திருமாவளவன்!

அன்னபூர்ணா விவகாரம் தொடர்பாக ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கோவை மக்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்- காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை!

பேரறிஞர் அண்ணா பிறந்தநாள்- ஒருசேர ஊர்வலம் சென்று மரியாதை செலுத்திய எஸ் பி வேலுமணி மற்றும் விஜய பிரபாகரன்...

பா.ம.க சாதி கட்சி என்றால் விடுதலை சிறுத்தைகள் கட்சி என்ன கட்சி ? திருமாவளவனுக்கு அன்புமணி கேள்வி!

நெருங்கி வருகிறது பெபின்கா சூறாவளி; 100க்கும் மேலான விமானங்கள் ரத்து..!

அடுத்த கட்டுரையில்