பங்குச்சந்தை கடந்த சில வாரங்களாக ஏற்றதில் இருந்து வருகிறது என்பதும் பங்கு சந்தையின் சென்செக்ஸ் 52ஆயிரத்திலிருந்து கடந்த இரண்டு வாரங்களில் 58,000 அருகில் வந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இன்று பங்குச்சந்தை திடீரென சரிவு ஏற்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று காலை பங்குச்சந்தை தொடங்கியதும் 150 புள்ளிகள் வரை சரிந்தது சென்செக்ஸ் 57965 என்ற புள்ளியில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல் தேசிய பங்குச்சந்தை சுமார் 60 புள்ளிகள் சரிந்து 17 ஆயிரத்து 285 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
பங்குச் சந்தையின் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி காலையில் குறைந்தாலும் மாலையில் மீண்டும் உயரும் என்ற நம்பிக்கை ஏற்பதாக பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.