Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியம் இல்லை: சிவசேனா

Webdunia
செவ்வாய், 2 ஜூலை 2019 (10:30 IST)
ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் சாத்தியமில்லாத ஒன்று எனவும், இது போன்ற விஷயங்களை குறித்து ஆலோசிக்க வேண்டும் எனவும் சிவசேனா கருத்து தெரிவித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 19 ஆம் தேதி ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் குறித்து அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தினார்.

ஆனால் அந்த கூட்டத்தில் பாஜக கூட்டணியில் உள்ள சிவசேனாவில் இருந்து பிரதிநிதிகள் யாரும் கலந்து கொள்ளவில்லை. இந்நிலையில் சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவுத் ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்துக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார்.

இதை குறித்து சஞ்சய் ராவுத், இந்தியா போன்ற பெரிய நாடுகளில் ஒரே ஒரு ஓட்டு மூலம் ஆட்சியை நிர்ணயிக்கவும் முடியும், ஆட்சியை கவிழ்க்கவும் முடியும். ஒரு மாநிலத்தில் 3 ஆண்டுகள் மேல் கவர்னர் ஆட்சியை அமல்படுத்த முடியாது. இது போன்ற பல பிரச்சனைகள் உள்ளதால் இந்த விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்த வேண்டும் என கூறியுள்ளார்.

மேலும் ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து மக்களவை சிவசேனா தலைவர் விநாயக் ராவுத் கூறுகையில், ‘மத்திய, மாநில தேர்தல் ஒரே நேரத்தில் நடந்தால் தேசிய பிரச்சனைகள் மட்டுமே கவனத்தில் கொள்ளப்படும் எனவும், பிராந்திய கட்சிகளுக்கு இது பெரும் பின்னடைவை கொடுக்கும் எனவும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைவருக்கும் ரூ.1000 என்பது திமுக அரசின் நாடகம்: டாக்டர் ராமதாஸ்

பட்டப் பகலில் அரங்கேறும் குற்றச் செயல்கள்.. கத்திக்குத்து சம்பவம் குறித்து தவெக விஜய்..!

என் மகன் செய்தது தப்புதான், ஆனால் மருத்துவர் என்னை திட்டுவார்: கத்தியால் குத்திய விக்னேஷ் தாய் பேட்டி..!

அமைச்சர் பேச்சுவார்த்தை எதிரொலி: மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்..!

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 மகளிர் உதவித்தொகை: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்

அடுத்த கட்டுரையில்
Show comments