கொரோனா இரண்டாம் கட்ட அலை உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பும் அதிகரித்துவருகிறது.
இந்நிலையில், மக்களைக் கொரொனா தொற்றிலிருந்து பாதுகாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
இந்நிலையில், கொரொனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகப்பட்சமாக உயர்ந்துள்ள நிலையில், போலி மருத்துகளும் போதிய ஆக்ஷிஜன் கிடைக்காததாலும் நோயாளிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் ஆம்புலன்ஸ் பில் தொகை கேட்போரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
ஐபிஎஸ் அதிகரி பங்கஜ் நெய்ன் தனது டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். அதில், ஒரு நோயாளியை குர்கானில் உள்ள மருத்துவமனையில் இருந்து லூதியானாவில் உள்ள ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் கட்டணம் ரூ.1.20 லட்சம் என தெரிவித்தார்.
இதற்கு நெட்டிசன்கள் கடும் எதிர்ப்புகள் தெரிவித்தனர். மேலும் ஒருசிலர் இதேபோல் தாங்களும் பாதிக்கப்பட்டதாக கூறி குற்றம்சாட்டி வருகின்றனர். இந்தக் கட்டணக்கொள்ளையைக் குறைக்க வேண்டுமென அனைவரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.