Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

காஸ்ட்லி காரில் செல்ஃப் டிரைவ் போகணுமா ? ’ஓலா ’ அதிரடி திட்டம்

காஸ்ட்லி காரில் செல்ஃப் டிரைவ் போகணுமா ?  ’ஓலா ’ அதிரடி திட்டம்
, வியாழன், 28 மார்ச் 2019 (19:50 IST)
நம் இந்தியாவில் ஓலா, உபர் போன்ற டாக்ஸு நிறுவனங்கள் வந்த பிறகு நடுத்தர மக்கள் வாகனக் கட்டணக் கொள்ளையிலிருந்து தப்பினர். இதனால் பெருவாரியான மக்களின் சுமைகள் குறைக்கப்பட்டது.
இந்நிலையில் ஓலா நிறுவனம் தற்போது புது முயற்சியில் இறங்கவுள்ளது. அதில்  500 மில்லியன் டாலர்களி முதலீடு செய்யவுள்ளதாக தெரிகிறது. குறிப்பாக இதில் 10000 கார்கள் இணைக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.
 
மேலும் செல்ஃப் டிரைவ் மூலமாக விலை உயர்ந்த எஸ்.யு.வி. ரககார்களை   ஈடுபடுத்த உள்ளனர். இதில் முக்கிய அம்சம் என்னவென்றால் நாம் இந்த ஓலா காரை சொந்தக் காராக உபயோகப்படுத்த முடியும் என்பதுதான்.
 
நாட்டில் உள்ள முக்கிர நகரங்களில்  இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாகத் தெரிகிறது.
 
மேலும் சொந்தமாக கார் வாங்க முடியாத கார்பரேட் ஊழியர்கள் வாடகைக்கும் குத்தகைக்கும் எடுத்து  இந்த காரை பயன்படுத்திக் கொள்ளலாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மணல் விற்பனையை நிறுத்தும் அரசு டாஸ்மாக் விற்பனையை நிறுத்துமா?