ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை தொடங்கும் நிலையில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தொடங்கும் தேதி குறித்த அறிவிப்பை இந்திய வானிலை ஆய்வு துறை தெரிவித்துள்ளது
தென்மேற்கு பருவமழை கேரளாவில் ஜூன் மூன்றாம் தேதி தொடங்கும் என்றும் நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை அதிக மழை பொழிவை கொடுக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு துறை தெரிவித்துள்ளது
கேரளாவில் ஜூன் மூன்றாம் தேதி தொடங்கும் தென்மேற்கு பருவமழையால் தமிழகத்திலும் பல இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அறிவிப்பு விவசாயிகள் மற்றும் பொது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது