இந்திய சுப்ரீம் கோர்ட் வரலாற்றிலேயே இல்லாத வகையில் சமீபத்தில் நள்ளிரவு 1.45 மணிக்கு உச்சநீதிமன்றம் கூடி கர்நாடகாவில் முதல்வராக எடியூரப்பா பதவி ஏற்கலாமா? வேண்டாமா? என்பது குறித்த வழக்கை விசாரித்தது. விடிய விடிய நடந்த இந்த விசாரணையின் முடிவில் எடியூரப்பா, கர்நாடக முதல்வராக பதவியேற்க தடையில்லை என்ற உத்தர்வை பிறப்பித்தது
இந்த நிலையில் எடியூரப்பா தனது ஆட்சியின் மெஜாரிட்டியை நிரூபிக்க கவர்னர் 15 நாட்கள் அவகாசம் கொடுத்திருந்தார். ஆனால் எடியூரப்பா நாளை மாலை 4 மணிக்குள் தனது மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவு பிறப்பித்தது
இந்த நிலையில் கர்நாடகாவில் தற்காலிக சபாநாயகராக போபையா என்பவர் நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து, காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் கட்சிகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும் இந்த மனுவை அவசர வழக்காக விசாரணை செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே நாளை காலை 11 மணிக்கு சட்டமன்றத்தை கூட்ட கவர்னர் உத்தரவிட்டுள்ளதால் இந்த மனுவை இன்று நள்ளிரவு உச்சநீதிமன்றம் விசாரணை செய்யுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்