கோவாவில் சத்ரபதி சிவாஜி சிலையை திறக்க வந்த அமைச்சர் மீது பொதுமக்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சத்ரபதி சிவாஜி பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில் மகராஷ்டிரா மாநிலத்தின் பல பகுதிகளில் இந்த கொண்டாட்டம் நடந்தது. கோவாவிலும் சில பகுதிகளில் சத்ரபதி சிவாஜி பிறந்தநாள் கொண்டாடப்பட்ட நிலையில் அங்கு தனியாருக்கு சொந்தமான இடத்தில் சிவாஜி சிலை வைக்கப்பட்டது.
இந்த சிலை வைக்க அந்த பகுதி மக்கள் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் இந்த சிலையை உரிய அனுமதி பெற்று வைக்கவில்லை என்றும் சிலை வைக்க தடை இல்லாத சான்றிதழ் பெறவில்லை என்றும் அந்த பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில் சத்ரபதி சிவாஜி சிலையை திறந்து வைக்க கோவா மாநில சமூக நீதித்துறை அமைச்சர் சுபாஷ் பால் தேசாய் அங்கு வந்த போது சிலையை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அவர்களிடம் அமைச்சர் சமாதான பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருந்த நிலையில் திடீரென அவர் மீது கல்வீசி தாக்குதல் செய்தால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் அமைச்சர் காயம் அடைந்ததாகவும் அதனை எடுத்து உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.