திருணாமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவுக்கு சென்றவர்கள் எல்லாம் இப்போது மீண்டும் அந்த கட்சியில் இருந்து விலக ஆரம்பித்துள்ளனர்.
மேற்கு வங்கத்தில் திருணாமூல் காங்கிரஸ் கட்சி தேர்தலில் வெற்றிபெற்று மூன்றாவது முறையாக வெற்றிகரமாக ஆட்சியை அமைத்துள்ளது. இந்த தேர்தலுக்கு முன்னர் திருணாமூல் காங்கிரஸில் இருந்து பல முன்னணி தலைவர்கள் பாஜகவில் ஐக்கியம் ஆகினர். அதற்கு முக்கியக் காரணமாக சொல்லப்பட்டது மம்தா வாரிசு அரசியல் செய்கிறார் என்பதுதான்.
ஆனால் தேர்தல் முடிந்ததும் பலரும் இப்போது பாஜகவில் இருந்து விலகி திருணாமூல் காங்கிரஸ் கட்சியில் சேர ஆரம்பித்துள்ளனர். இதையடுத்து அப்படி திரும்புவோர் ஆட்டோக்களில் சென்று வீதி வீதியாக பாஜகவில் சேர்ந்தது தவறுதான் எனக் கூறி மன்னிப்புக் கேட்கின்றனராம். ஆனால் இதன் பின்னணியில் மம்தா பானர்ஜி இருப்பதாக பாஜகவினர் குற்றம் சாட்டியுள்ளனர்.