மதிப்பெண் சான்றிதழை வழங்காமல் இழுத்து அடித்த கல்லூரி முதல்வரை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய மாணவனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்தூர் என்ற பகுதியில் பார்மசி கல்லூரி ஒன்றில் முதல்வராக இருப்பவர் 50 வயதான ஷர்மா. இவர் நேற்று மாலை கல்லூரி முடிந்து வீடு திரும்பி கொண்டிருக்கும்போது அவரை வழிமறித்த மாணவன் தன்னுடைய மதிப்பெண் சான்றிதழை வழங்கிட வேண்டும் என்றும் கூறினார்
அப்போது அவர் சரியாக பதில் கூறாததால் ஆத்திரம் அடைந்த அந்த மாணவன் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை அவர் மீது ஊற்றி வைத்து கொளுத்தி விட்டான். இதனால் படுகாயம் அடைந்த கல்லூரி முதல்வர் தற்போது 90 சதவீத காயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து மாணவரை கைது செய்துள்ளனர்.