Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

பட்டாசுக்கு நோ சொல்ல முடியாது –உச்சநீதிமன்றம் அதிரடி

பட்டாசுக்கு நோ சொல்ல முடியாது –உச்சநீதிமன்றம் அதிரடி
, செவ்வாய், 23 அக்டோபர் 2018 (12:11 IST)
நாடு முழுவதும் பட்டாசு தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என தொடுக்கப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பினை வழங்கியுள்ளது.

இந்தியாவின் பெரும்பாண்மையான மக்கள் கொண்டாடும் ஒரு பண்டிகையாக தீபாவளி இருந்து வருகிறது. தீபாவளி என்றதுமே புதுச்சட்டை துணிகளுக்கு அடுத்து நம் நியாபகத்துக்கு வருவது பட்டாசுகள்தான். தீபாவளி அன்று வெடிப்பதற்கான பட்டாசுகள் தயாரிப்பதற்கெனவே பல்வேறு பட்டாசு தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. அதில் பல லட்சக்கணக்கான ஏழை எளிய தொழிலாளிகள் பணியாற்றி வருகின்றனர்.

பட்டாசு மற்றும் தீபாவளி அன்று உபயோகப்படுத்தப்படும் பல்வேறு வெடிப்பொருட்களால் நாடு முழுவதும் காற்று மாசுபடுவதாகவும் மக்களுக்கு இதனால் பல்வேறு சுவாசப் பிரச்சனைகள் வருவதாகவும் கூறி பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனையைத் தடை செய்ய வேண்டுமென பொதுநல வழக்கொன்று உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டது. அந்த வழக்கு இன்று ஏ கே சிக்ரி மற்றும் அஷோக் பூஷன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
webdunia

விசாரணையின் முடிவில் தீர்ப்பளித்த நீதிபதிகள் ’ஒட்டு மொத்தமாக பட்டாசுகளை நாடு முழுவதும் தடை செய்ய முடியாது. அனுமதிக்கப்பட்டுள்ள அளவுக்குள் சல்ஃபர், பொட்டாசியம் மற்றும் பேரியம் ஆகியவற்றை வெளியிடும் பசுமை பட்டாசுகளை தீபாவளி அன்று இரவு 8 மணி முதல்  10 மணி வரை வெடிக்கலாம். இந்த வரையறைக்குள் வராத பட்டாசுகள் மற்றும் ஒலி மாசுபாடு செய்யும் வெடிகளை அவை உற்பத்தி செய்யப்பட்டு இருந்தாலும் விறபனை செய்யக்கூடாது. பட்டாசு வெடிக்கும் நேரத்தினை அந்தந்த எல்லைக்கு உட்பட்ட காவல்துறையினர் கண்காணிக்க வேண்டும்’ என அறிவித்துள்ளது.

மேலும் ஃபிலிப்கார்ட் மற்றும் அமேசான் போன்ற ஆன்லைன் நிறுவனங்களின் வழியாக பட்டாசுகள் விற்கப்படுவதை தடை செய்தும் உத்தரவிட்டுள்ளது. இதனால் பட்டாசு விற்பனையில் ஈடுபட்டுள்ள சிறு மற்றும் குறு வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தன் 3 குட்டிகளின் தந்தையை தானே கொன்ற பெண் சிங்கம்