மாநில அமைச்சரவையின் முடிவுக்கு உட்பட்டவர் தான் கவர்னர் என சுப்ரீம் கோர்ட் கருத்து தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு உள்பட ஒரு சில மாநில அரசுகளுக்கும் கவர்னர்களுக்கும் இடையே பிரச்சனை எழுந்து வரும் நிலையில் பஞ்சாபில் சட்டமன்ற கூட்டத்தொடரை நடத்த ஆளுநர் அனுமதி வழங்கவில்லை என சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் மாநில அமைச்சரவை எடுக்கும் முடிவுகளுக்கு உட்பட்டவர் தான் கவர்னர் என உச்சநீதிமன்ற கருத்து தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் ஆளுநர் என்ன விவரங்களை கேட்கிறாரோ அதை மாநில அரசு வழங்க வேண்டும் என்றும் அதேபோல் மாநில அரசு எடுக்கும் முடிவுகளுக்கு ஆளுநர் உள்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
அரசியல் கொள்கைகளில் மாறுபாடு இருந்தாலும் மக்கள் நலன் சார்ந்த பணி என்றால் ஆளுநர் மற்றும் மாநில அரசு இணைந்து செயல்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்
இந்த நிலையில் பட்ஜெட் கூட்டல் தொடரை நடத்த கவர்னர் ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டு விட்டதாக கவர்னர் தரப்பில் இருந்து நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.