ஏற்கனவே, தமிழக ஆளுநர் மசோதாக்களை நிறுத்தி வைத்த வழக்கில் ஜனாதிபதிக்கு மூன்று மாத காலம் அவகாசம் கொடுத்து, உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மேற்குவங்க மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சியை நியமனம் செய்ய வேண்டும் என்று ஜனாதிபதிக்கு உத்தரவு விட தீர்ப்பளிக்க வேண்டும் என்ற வழக்கில் மீண்டும் ஜனாதிபதிக்கு நாங்கள் உத்தரவு பிறப்பிக்க வேண்டுமா? முடியாது என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்குவங்க மாநிலத்தில் வக்பு திருத்தச் சட்டத்திற்கு எதிராக வன்முறை நடைபெற்று வரும் நிலையில், அங்கு துணை ராணுவப்படையை அனுப்பி வைக்க வேண்டும் என்றும், அது மட்டும் இன்றி மேற்குவங்கத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, "ஏற்கனவே நாங்கள் அரசு நிர்வாகத்தில் தலையிடுவதாக குற்றச்சாட்டு இருக்கிறது. இந்த சூழலில் ஜனாதிபதிக்கு இது தொடர்பான உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?" என்று கூறிய நீதிபதி, மனுதாரரின் கோரிக்கையை ஏற்க மறுப்பதாக தெரிவித்தனர்.
இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.