Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உங்கள் குறைகளை முதலமைச்சரிடம் சொல்லுங்கள்.. என்னிடம் சொல்ல வேண்டாம்: மக்களிடம் சுரேஷ்கோபி

Advertiesment
சுரேஷ் கோபி

Mahendran

, வெள்ளி, 19 செப்டம்பர் 2025 (11:30 IST)
கரூவன்னூர் கூட்டுறவு வங்கியில் இழந்த பணத்தை மீட்டுத் தரக் கோரி உதவி கேட்ட பெண்ணிடம், மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி பேசிய விதம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  
 
கேரள மாநிலம் திருச்சூரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியின்போது, ஆனந்தவள்ளி என்ற பெண் சுரேஷ் கோபியிடம் சென்று, “தனது நிலத்தை விற்று கரூவன்னூர் கூட்டுறவு வங்கியில் பணத்தை போட்டதாகவும், தற்போது அதை எடுக்க முடியாமல் தவிப்பதாகவும்” முறையிட்டார்.
 
அப்போது குறுக்கிட்ட சுரேஷ் கோபி, “நீங்கள் இந்த விஷயத்தை முதலமைச்சரிடமோ அல்லது மாநில அமைச்சரிடமோ எடுத்துச் செல்லுங்கள்” என்று கூறினார். நான் உங்கள் அமைச்சர் அல்ல. நான் இந்த தேசத்தின் அமைச்சர். இங்கு இரக்கத்தையோ, கருணையையோ எதிர்பார்க்காதீர்கள், நான் நேரடியாக பேசுவேன்,” என்று மலையாளத்தில் கோபமாக பேசினார்.
 
இந்த சம்பவம், நடிகர்-அரசியல்வாதியான சுரேஷ் கோபியின் மக்கள் தொடர்பு குறித்து மீண்டும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குடிநீரில் நச்சு கலந்து 6 பேர் பலி.. திமுக, அதிமுக இணைந்து போராட்டம்..!