Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

பாகிஸ்தானுக்கு அடிபணியுங்கள்.! காங்கிரஸ் மூத்த தலைவர் சர்ச்சை பேச்சு..! பாஜக கண்டனம்..!!

Manishankar Ayyar

Senthil Velan

, வெள்ளி, 10 மே 2024 (13:04 IST)
பாகிஸ்தானுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் இல்லையென்றால் இந்தியா மீது பாகிஸ்தான் வெடிகுண்டு வீசினால் என்னவாகும் என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவரது கருத்துக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
 
நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் சமீபகாலமாக காங்கிரஸ் தலைவர்கள் சர்ச்சை கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அண்மையில் தெற்கில் உள்ளவர்கள் ஆப்ரிக்கர்களைப் போல உள்ளனர் என கூறி  சர்ச்சையில் சிக்கிய காங்கிரஸ் வெளிநாட்டு பிரிவு தலைவராக இருந்த சாம் பிட்ரோடா தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில், பாகிஸ்தானை மதிக்காவிட்டால், அந்நாடு நம் மீது வெடிகுண்டு வீசும் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மணிசங்கர் அய்யர் தற்போது பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவரது இந்த பேச்சுக்கு பாஜக தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இது தொடர்பாக மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் வெளியிட்ட அறிக்கையில், இந்த தேர்தலில் ராகுலின் காங்கிரஸ் கட்சியின் கொள்கை வெளிப்படையாக தெரியவருகிறது என்று கூறியுள்ளார்.


சியாச்சினை வழங்கி பாகிஸ்தானை உள்ளேயேயும், வெளியேயும் ஆதரிப்பது என்றும் யாசின் மாலிக், எஸ்டிபிஐ உள்ளிட்ட பயங்கரவாத அமைப்பு தொடர்புடைய நபர்களுக்கு உள்ளேயேயும் வெளியேயும் ஆதரவு தருவது, பரவலாக ஊழல் செய்வது , ஏழை மக்களின் பணத்தை கொள்ளையடிப்பது, முஸ்லிம் சமுதாயத்தை சமரசப்படுத்துதல் சீன கம்யூனிச கட்சியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டு அக்கட்சியுடன் கூட்டணி அமைப்பது, மக்களை பிரிப்பது, பொய் சொல்வது, போலி வாக்குறுதி அளித்து ஏழைகளை தவறாக வழிநடத்துவது ஆகியவை கொள்கைகள் என்று அவர் விமர்சித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இது முருகனா இல்ல வேற எதுவுமா..? கிண்டலுக்கு உள்ளான 56 அடி உயர முருகன் சிலை!