Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சோனியாவை எதிர்த்து சுஷ்மா போட்ட விபரீத சபதம்: 15 வருட பிளாஷ்பேக்!!

Advertiesment
சோனியா காந்தி
, புதன், 7 ஆகஸ்ட் 2019 (10:31 IST)
மொட்டை அடித்து வெள்ளை புடவை கட்டிக்கொண்டு கணவனை இழந்த பெண் போல வாழ்வேன் என சுஷ்மா சுவராஜ் சோனியாவை எதிர்த்து 15 ஆண்டுகளுக்கு முன்னர் சபதம் போட்டார். 
 
உடல்நலக்குறைவு காரணமாக மரண்மடைந்த சுஷ்மா சுவராஜ் குறித்த தகவல்கள் பல வெளியாகி வருகின்றனர். இதுவும் அவரைப்பற்றிய சுவாரஸ்மான தகவல்தான். ஆனால், இந்த தகவல் சுஷ்மா சோனியாவுக்கு எதிராக எடுத்த சபதத்தை குறித்தது. 
 
கடந்த 2004 ஆம் ஆண்டு காங்கிரசின் அத்தனை தலைவர்களும் சோனியா காந்தி பிரதமராக வேண்டும் என ஒருமித்த குரலில் கோரிக்கை வைத்தனர். இது அப்போது பெரும் சர்சைகளை ஏற்படுத்தியது. 
சோனியா காந்தி
அப்போது சுஷ்மா, ஒரு வெளிநாட்டுக்காரர் எனது இந்திய நாட்டை ஆள்வது எனது உணர்வுகளை நொறுக்கிப் போடுகிறது. ஒருவேளை சோனியா காந்தி இந்தியாவின் பிரதமராக பதவியேற்றார் நான் எனது தலையை மொட்டை அடித்துக் கொள்கிறேன். 
 
வெள்ளை சேலை கட்டிக் கொள்கிறேன். பஞ்சு மெத்தையை தவிர்த்துவிட்டு, கட்டாந்தரையில்தான் படுப்பேன். வெறும் தானியங்களை மட்டுமே உணவாக உட்கொள்ளுவேன், என்று மிகப்பெரிய சபதத்தை எடுத்தார். 
சோனியா காந்தி
அப்போது இது பெரும் பேச்சாக இருந்தது. ஆனால், சோனியா பிரதமராக பதவியேற்காமல் மன்மோகன் சிங்கை பிரதமாக்கினார். எனவே, சுஷ்மாவும் தனது சபதத்தை நிறைவேற்ற வேண்டிய அவசியம் இல்லாமல் போனது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மனைவி மேல் சந்தேகம் – குடும்பத்தையே அழித்த கொடூரன் !