வெளிநாட்டில் உள்ளவர்கள், இந்தியாவில் உள்ள தங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு உணவு ஆடர் செய்து அனுப்பலாம் என்று ஸ்விக்கி நிறுவனம் தெரிவித்துள்ளது.
தீபாவளி, பொங்கல் போன்ற விசேஷ நாட்களில், வெளிநாட்டில் உள்ளவர்கள் சொந்த நாட்டிற்கு வர முடியாத நிலை ஏற்படலாம். இப்படிப்பட்ட நேரங்களில், வெளிநாட்டில் இருந்து தங்களுடைய உற்றார், உறவினர், நண்பர்களுக்கு இனிப்பு உள்ளிட்ட பொருட்களை ஸ்விக்கி மூலம் ஆர்டர் செய்து, வாழ்த்துக்களை தெரிவிக்கலாம்.
இப்படி ஒரு வசதியை ஸ்விக்கி நிறுவனம் அறிவித்துள்ளது. 'இன்டர்நேஷனல் லாகின்' என்ற அம்சத்தை அறிமுகம் செய்துள்ள ஸ்விக்கி நிறுவனம், இதன் மூலம் வெளிநாட்டில் உள்ளவர்கள் இந்தியாவில் உள்ள தங்கள் உறவுகளுக்கு உணவு ஆர்டர் செய்யலாம் என்றும் அறிவித்துள்ளது.
மேலும், இந்த ஆர்டருக்கு கட்டணத்தை வெளிநாட்டு கிரெடிட் கார்டு அல்லது யுபிஐ மூலம் செலுத்தலாம் என்றும் ஸ்விக்கி அறிவித்துள்ளது. இந்த வசதியை அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, பிரிட்டன் உள்பட 27 நாடுகளில் உள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று ஸ்விக்கி நிறுவனம் அறிவித்துள்ளது.